Tuesday, September 28, 2010

மழலை என் மகள்

இன்று ஞாயிறும் திங்களும் கண்சிமிட்டும் நந்நாள்-அந்த
பேரொளியில் பிறந்தாள் மங்கை
தாமரை இதழ் பொற்பாதம்-அங்கம்
தங்கமென திகழ -கன்னத்தில் குங்கும சிகப்பு
செவ்விதழ் உதடு அதில் -அவள்
புன்முறுவல் புன்னகை அழகு
கண்களில் தோன்றும் கனிவு
அவள் புவிக்கு வந்த தேவதை
மலர்களில் உயர்ந்த மலர் பல உண்டு
அவள் புன்முறுவலில் பூக்கும் புன்னகை மலர் -உயர்வு
இறைவனும் மழலையும் ஒன்று -இல்லை
மழலையில் இறைவனை காணலாம் -இன்று
அவள் கைவிரல் காட்டும் அபிநயம்
அவள் வாய்மொழி மீட்டும் ரீங்காரம் -
மாற்று உண்டோ? இப்புவியில்
கண்களால் அவள் செயும் குறும்பு -கண்ட
எனக்கு இன்று பசிக்கு விடுமுறை
அவள் கால்கள் ஆடும் நாட்டியம் -அவள்
கால் கொலுசின் சிணுங்கல் -
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை தமிழில்
துயில் கொள்ளும் குழந்தயின் அழகு
அவள் செல்ல சிணுங்கல்
கொஞ்சும் பார்வை -இவர்களல்லவோ தேவதைகள்
விண்ணிலிருந்து மண்ணில் வந்த தாரகைகள்
மழலைகள் புன்னகைக்கு ஈடாகுமோ? புவியில் ஏதும்?
..
ரிகுமார்

Thursday, September 16, 2010

மண்ணின் மனம்

மாலை பொழுது மனதை வருடும் தென்றல்
மெல்லிய சாரல் மனதை மயக்கும் தூறல்
தேனிசை பாடல் தெள்ளென தெளிக்க -
வேறென்ன வேண்டும் -மானிடா உனக்கு?
முதல் சாரலில் வரும் மண்ணின் மணம்
அதை ரசிப்பதற்கு வேண்டும் -மனதில் மனம்
கைகுத்தல் அரிசி மங்கையர் கைப்பக்குவம்
மறக்க முடிமா மானிடா உனக்கு?
கண்ணே மணியே முத்தே பவிழமே -இவை யாவும்
ஈடாகுமோ? மழலையின் பால் முகத்திற்கு?
இதை விட இன்பமுண்டோ இப்புவியில் ?-
இல் என்று சொல்வான் அவன் மானிடனா?
பெண் சுகம் அல்ல பலவீனம் -அவள்
கண்ணீர் என்றும் ஆண் அவனுக்கு -பலவீனம்
புன்னகைக்கும் பூ அவள் -மெல்லிய சாரல் அவள்
பாசத்தால் அவள் ஒரு காவிரி - பொங்கி எழுந்தால்
அவள் ஒரு கண்ணகி ---

. . ஹரிகுமார்