Wednesday, September 9, 2009

தமிழ் நீ

தூளியிலே துள்ளித்திரிந்த தூய தமிழ் அன்னை -நீ
செந்தமிழ் எனும் பேரெடுத்த பேரழகு பொய்கை -நீ
வந்தாரை வாழ வைக்கும் நம் நாடாம் தமிழ் நாட்டை
பெற்றெடுத்த அன்னை -நீ
அகர முதல ஆசானை அனைவருக்கும் தந்தவள்-நீ



அறிஞர் அண்ணாவும் கர்மவீரர் காமராஜரையும்
பேர்சொல்ல வைத்தபுண்ணியம் -நீ
வேட்டுமையில் ஒற்றுமை காண் தமிழனுக்கு
வேறுண்டோ ?உன்போல் தாயுண்டோ?-நீ
எத்திசை நோக்கினும் தென்திசை தமிழே !-நீ
உனக்கேதும் ஈடில்லை புவியில் எனவே
நீயும் என் தாயே ........................-நீ
மலர்கள் தரும் வாசம் -நீ
செந்நெல் தரும் வாசம் -நீ
வண்டுகளின் ஓசையிலும் -நீ
வான்பொழி மாரியிலும் -நீ
வஞ்சமில்லா மொழியிலும் -நீ
முச்சங்கம் தந்தவளும் -நீ
மூ -வேந்தரை தந்தவளும் -நீ
தொழுவேன் உன் அடிபணிந்து -நீ
இன்றி நானில்லை -தமிழே !!! நீ

ஹரிகுமார்